Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி ஸ்பெஷல் மைசூர் பாகு செய்ய...!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
நெய் - 2 1/2 கப்
செய்முறை:
 
கடலை மாவை நன்றாக சலித்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கடலை மாவை போட்டு 3 நிமிடம் வரை  மிதமாக வாணலியில் வறுத்து தட்டில் கொட்டி வைக்கவும். மிதமான நெருப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும். மிதமான சூட்டில்  சர்க்கரையில் நீர் சேர்த்து பாகு ஆகாமல் கரைக்கவும்.
 
அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்த கடலை மாவுடன், கரைந்த சர்க்கரை நீர் கரைசலை சேர்த்து கட்டியாகாமல் நன்றாக கலக்கவும்.  கடலைமாவு சர்க்கரை கரைசலுடன் கொதிக்க தொடங்கியதும், உருக்கி வைத்த நெய்யை நான்கைந்து முறைகளாக சேர்த்து கைவிடாமல்  கிளறிக்கொண்டே இருக்கவும்.
 
இறுதியாக எல்லா நெய்யும் சேர்த்த பின் மாவு நன்கு கெட்டியாக கடாயில் ஒட்டாமல் வரும்போது, அதை இறக்கி நெய் தடவிய தட்டில்  கொட்டவும். சீராகப் பரப்பி ஓரங்களை அழுத்தி விட்டு மேல் பாகத்தை தடவி வழவழப்பாக்கவும். இது நன்கு ஆறிய பின் நமக்கு தேவையான  வடிவத்தில் வெட்டி பரிமாறலாம். மைசூர்பாக் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments