Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உகந்த உணவுமுறைகள் என்ன...?

Advertiesment
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உகந்த உணவுமுறைகள் என்ன...?
கர்ப்பக் காலத்தில் உணவில் எடுத்துகொள்ளும் அதே கவனத்தைக் குழந்தை பிறந்த பின்னரும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் தாய் உண்ணும் உணவே தாய்ப்பாலாக குழந்தைக்கு வந்து சேரும். அதுவே குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 
பால் சுரப்பை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?
 
நீர்ச்சத்துகள் அதிகம் உள்ள காய்கறிகளான முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கும். பேரீச்சம், அத்தி போன்ற இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகமாக்கும். கல்யாண முருங்கை இலையைத் தேங்காய்  எண்ணெயில் வதக்கி சாப்பிடலாம்.
 
முளைகட்டிய பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை சிற்றுண்டிகளாக சாப்பிடலாம். இது தாய் மற்றும் குழந்தைக்கும் தேவையான  சரிவிகித சத்துள்ள உணவாக அமையும்.
 
நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள் மற்றும் காய்கறிகளான‌ கேரட், முருங்கைக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பு சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னையையும் தடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கும் செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.
 
சுறா போன்ற பால் சுரப்பைக் கூட்டும் மீன்களைச் சாப்பிடலாம். பப்பாளிக் காயை வேகவைத்துச் சாப்பிடலாம். இதில் குழந்தைக்குத் தேவையான வைட்டமின் ‘ஏ’ சத்து அடங்கியுள்ளது.
 
வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அல்லது வெந்தயக்கஞ்சி வைத்து குடிக்க பால் சுரப்பு அதிகரிப்பதோடு, கருப்பையைச் சுருங்கச் செய்து  கருப்பையின் அழுக்குகளையும் நீக்கும்.
 
பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பை அதிகமாக்கி உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்கும்.  நெய்யில் பூண்டை  தோலுடன் நன்கு வதக்கி, பின் தோலை நீக்கி அதை சாப்பிட்டு வர தாய்ப்பால் நன்கு ஊறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோய் தீர்க்கும் சில மூலிகைகளில் பயன்கள்....!