வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. வயிற்றுக் கோளாறு அல்சர், நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. வாயில் துர்நாற்றம் சில நேரங்களில் அது உள்ளே காணப்படும் சில பிரச்சினைகளை பற்றி நமக்கு உணர்த்தும் எச்சரிக்கையாகவும் அது இருக்க கூடும். வயிற்றில் புண் இருந்தால் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படுகின்றன.
எந்த ஒரு உணவுப் பொருளை சாப்பிட்ட பின்னரும் நன்றாக வாயை சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் உணவுத் துகள்கள் நம் பற்களில், ஈறுகளில், நாக்கில், தங்கி கெட்ட பாக்டீரியாக்களை உருவாக காரணமாக அமைந்து விடுகிறது.
நாம் இரவில் சாப்பிடும் உணவில் அதிகப்படியான மாசாலா, எண்ணெய் பதார்த்தங்கள், பூண்டு, வெங்காயம் , போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். அதாவது அல்சர் நோய் உள்ளவர்களுக்கு நிச்சயம் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம். வாய் புத்துணர்ச்சியாக இருக்க சில புதினா இலைகளை மென்று சாப்பிடலாம்.
காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
கிராம்பு சிறிதளவு எடுத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை காலை உணவு எடுத்துக் கொண்ட பின் விரல்களால் சிறிதளவு எடுத்து தேனில் கலந்து செய்து சாப்பிட்டு வரலாம்.
அதிக தண்ணீர் குடிக்கவேண்டும். இது வயிற்றிலுள்ள நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
Edited by Sasikala