Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குதிகால் வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

Advertiesment
Heel pain
, செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (17:54 IST)
பாதங்கள் தான் உடலின் மொத்த எடையின் அழுத்தத்தைத் தாங்குகின்றன. எனவே விளையாடும் போதும் கடினமான தரைகளில் உங்கள் பாதங்கள் தாறுமாறாக அழுத்தி நடப்பதால் அல்லது தவறான காலணிகளை அணிவதனாலும் சில சமயங்களில் குதிகால் வலியை உருவாக்கலாம்.


குதிபாகத்தில் கூடுதல் பஞ்சு மற்றும் பாத வளைவுகளை தாங்கிப் பிடிக்கும் வகையான காலணிகள் அணிவது மிகுந்த பலன் கொடுக்கும். குதிகால் வலி வழக்கமாக ஏற்படும் போது முறையான உடற்பயிற்சி சிகிச்சை, சரியான ஓய்வு மற்றும் எதிர் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது தானாகவே குணமடைகிறது.

வலி நீக்கும் களிம்புகளைக் குதிகாலில் பூசலாம். காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரில் பாதத்தை ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு, சாதாரணத் தண்ணீரில் ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி மாறிக் மாறி குறைந்தது 20 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாகக் கிடைக்கும். குதிகால் வலி குறையும்.

கால்சியம் உள்ள உணவுகள், காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். அதாவது பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடிப்பதால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தைப் பெறமுடியும்.

ஒட்ஸ், தயிர், வெள்ளைக்காராமணி, பச்சைக் கீரைகள், பாதாம் ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்விரல் தட்டல் குதிகால் வலிக்கு ஒரு நல்ல பயிற்சியாகும்.

உங்கள் பாதத்தின் குதிப்பகுதி தரையில் திடமாக இருக்கும்படி வைத்தபடி கால் விரல்களை மட்டும் மேலே உயர்த்துங்கள். இப்பொழுது நான்கு விரல்கள் உயர்ந்தபடி நிற்க பெருவிரலால் மாத்திரம் தரையைத் தட்டுங்கள். இனி மறுபுறமாகச் செய்யுங்கள். அதாவது பெருவிரல் உயர்ந்து நிற்க மற்ற நான்கு விரல்களால் தரையைத் தட்டுங்கள். இவ்வாறு உடற்பயிற்சி செய்வதால் குதிகால் வலி குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உணவின் மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா...?