Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
உணவுக்குழாய்க்கு கீழ் முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலத்தை உணவுக்குழாய்க்குள் நுழைய விடாமல் தடுக்கிறது. இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக் கோட்டை கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம்.

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும், அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். 'அல்சர்' எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
 
வயிற்றில் அதிக அளவு உணவு இருக்கும் போது அஜீரணப் பிரச்சனை நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. எனவே அதிக உணவு உண்பதை தவிர்ப்பது   மிகவும் நல்லது.
 
அதிக கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச்  சாப்பிடாமல் இருப்பது, பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல், நொறுக்கு தீனிகளால் வயிற்றை நிரப்புவது, இரவில் தாமதமாக   உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.
 
இறுக்கமான உடைகளை அணிவதால் வயிற்றின் இயற்கையான ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. எனவே ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
 
மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி உண்ணும் போது ஜீரண மண்டலம் பாதிப்பு  அடைந்து நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.
 
அவசரம் அவசரமாக உணவை மென்று விழுங்கும் போது வயிற்றிற்கு வேலை அதிகமாவதால் அதுவும் நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. எனவே உணவை  மெதுவாக மென்று விழுங்குவது மிகவும் நல்லது.
 
சிகரெட்டில் உள்ள நிகோடின் தொண்டை, உணவுக்குழாய் போன்றவற்றை பலம் இழக்கச் செய்து, உணவு ஜீரணம் முழுமை அடையாமல் போவாதால் நெஞ்சு எரிச்சல் உண்டாகிறது.எனவே புகைபழக்கத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுலபமான முறையில் தக்காளி சாஸ் செய்ய...!!