Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓமத்தை எந்த முறையில் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்...?

ஓமத்தை எந்த முறையில் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்...?
வயிற்று வலி வந்து விட்டால் ஐந்து கிராம் ஓமத்துடன், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்து பொடி செய்து அதனை தேனில் கலந்து சாப்பிட வேண்டும். வயிற்று வலி குணமாகும்.

நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கேட்டால் கிடைக்கும் அதனை வாங்கி வந்து மூட்டு வலி இருந்தால் தடவி வர வேண்டும் மூட்டு வலி விரைவில்  குணமாகும்.
 
செரிமான பிரச்சனை மற்றும் ஆஸ்துமா போன்றவை இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் விரைவில்  குணமாகும்.
 
இடுப்பு வலி இருந்தால் அடுப்பில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிதளவு தேங்காய்  எண்ணெய் சேர்த்து மறுபடியும் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும் இதில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் பின் அதனை  இளஞ்சூடாக இருக்கும் பொழுதே இடுப்பு பகுதியில் தேய்த்து வரவேண்டும். இடுப்பு வலி குணமாகும்.
 
வயிறு மந்தமாக இருந்தால் ஓமம், சீரகம் சமஅளவு எடுத்து அதனை ஒரு கடாயில் பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும். பின் அதை இறக்கி ஆறவைத்து  உப்பு சேர்த்து மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். இதை சாப்பிட பிறகு 20 நிமிடம் கழித்து சாப்பிட்டு வர வேண்டும் .
 
தொப்பை குறைய வேண்டும் என்றால் அன்னாசி பழம் நான்கு துண்டு மற்றும் ஓமம் பொடி இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனை இறக்கி அப்படியே மூடி வைக்க வேண்டும். இதை மறுநாள் காலையில் நன்கு கரைத்து 15 நாள் தொடர்ந்து குடித்து வரவேண்டும்.
 
ஓமம் பொடி சிறிது உப்பு சேர்த்து மோரில் குடித்து வந்தால் நெஞ்சு சளி வெளியேறும். சோர்வாக இருப்பவர்கள் மற்றும் சோம்பல் இருப்பவர்கள் ஓமம் தண்ணீர்  குடித்து வந்தால் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பல்வலி இருப்பவர்கள் ஓமம் எண்ணெய் எடுத்து பஞ்சில் நனைத்து வலி உள்ள இடத்தில் வைத்தால் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நண்டு மிளகு மசாலா செய்ய வேண்டுமா...?