Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை அற்புத பலன்கள் உள்ளதா...?

கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை அற்புத பலன்கள் உள்ளதா...?
கரும்பு ஜூஸில் சர்க்கரை சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இவை உடலில் சென்று ரத்தத்தில் இழந்த சக்கரை சத்துக்களை ஈடு கட்டி, உடல் உடனடியாக சுறுசுறுப்பு, உற்சாகம் அடைய உதவுகிறது.

உங்கள் மெட்டாபலிசத்தை அதிகரித்து உடனடி ஆற்றலை அளிக்கும். ஜீரண சக்திக்கு எளிய மருந்து கரும்புச் சாறு . இதில் ஜீரண சக்திக்கு உதவும் நார்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் குணமாகும் வாய்ப்பு உள்ளது.
 
கரும்புச் சாறோடு சேர்க்கப்படும் இஞ்சியும் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு மிக முக்கியம் எலக்ட்ரோலைட்ஸ். இவை இளநீர், குளுக்கோஸ் போன்ற  பானங்களுக்கு அடுத்ததாக கரும்புச் சாறில் அதிகமாக உள்ளன.
 
இது உடல் சோர்வடையாமல் தக்க வைக்க உதவும். நுரையீரல் செயல்பாடும் அதிகரிக்கும். கரும்புச் சாறில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்களின் உறுதித் தன்மைக்கு உதவும். வாய் துர்நாற்றத்தை அகற்றும்.
 
இதில் முக்கிய மருத்துவ குணம் என்னவெனில் புற்று நோய் கிருமிகளைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக பெண்களைத் தொடரும் மார்பகப் புற்று நோய்த் தொற்றை ஆரம்பத்திலேயே அகற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கருவுற்றிருக்கும் பெண்கள் அடிக்கடி அருந்த வேண்டிய சிறந்த பானமாக கரும்பு ஜூஸ் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் போலிக் அமிலம் மற்றும்  வைட்டமின் பி 9 சத்துகள் அதிகம் இருப்பதால், இவை குழந்தை குறைபாடுகளோடு பிறக்கும் நிலையை தடுக்கிறது.
 
உடல் மட்டுமன்றி சருமம் தொடர்பான பிரச்சனையும் குறிப்பாக முகப்பருக்களை அழிக்கும் ஆற்றல் கரும்புச் சாறில் உள்ளது. இதில் உள்ள ஹைட்ராக்ஸி ஆசிட்  இதற்கு உதவுகிறது.
 
கரும்பு ஜூஸ் அடிக்கடி பருகுபவர்களுக்கு வயிறு மற்றும் குடல் சுத்தமாகிறது. மேலும் வயிற்றில் உணவு செரிமானத்துக்கு உதவும் அமிலங்களின் சுரப்பை  அதிகப்படுத்தும். அதன் வேதியியல் சமச்சீர் தன்மையையும் சரியான விகிதத்தில் வைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு அக்னி கலசத்தை உடைத்தால் ஆயிரம் கலசம் வரும்! – ராமதாஸ் எச்சரிக்கை!