Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...!!

Advertiesment
கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...!!
இயற்கை விளைவிக்கும் காய்கறிகளில் பச்சையாகவே உண்ணும் அளவிற்கு சுவை மிக்கது கேரட். அதுமட்டுமல்லாமல் அனைத்து சத்துக்களும் விரயம் ஆகாமல்  கிடைக்கிறது. 

கொழுப்புத் தொல்லையும், ஆண்மைக்குறைவு பிரச்சினையும் நெருங்கவே நெருங்காது. ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும்  உதவுகிறது.
 
பச்சையான கேரட்டை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு பற்களில் நுண்கிருமிகள் படிவதைத் தடுத்து, பற்சொத்தை, பற்களின் எனாமல் வலுவிழப்பது போன்ற  குறைபாடுகளை நீக்கி ஈறுகளை பலப்படுத்துகிறது.
 
கொழுப்பைக் கரைக்கும் திறன் கொண்டதாகும். ரத்தத்தைச் சுத்திகரித்து, விருத்தி அடையச் செய்கிறது. குடல்புண்கள், வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. மார்பகப் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பிக்க வழிசெய்கிறது.
 
பித்தக் கோளாறுகள், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அழிக்கும். சருமத்திற்கு பொலிவு தந்து, எலும்புகளை வலுப்படுத்துகிறது. உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
 
காரட்டை பச்சையாக சாப்பிடுபவர்களுக்கு பீட்டா-கரோட்டின் சத்து குறையாமல் முழுமையாக கிடைப்பதால் கண்களில் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, வயதான  காலத்திலும் கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்க உதவுகிறது.
 
கேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும்  பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
 
நார்ச்சத்து மிகுந்த கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உணவில் நார்ச்சத்து தேவை பூர்த்தியாகி, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற  குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 லட்சத்தை தாண்டிய பாதிப்பு; 6 ஆயிரத்தை நெருங்கிய பலி – மாநிலவாரி நிலவரம்