Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு நோய்களுக்கும் தீர்வாக அமையும் துளசி இலை !!

பல்வேறு நோய்களுக்கும் தீர்வாக அமையும் துளசி இலை !!
ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை  உட்கொள்ளலாம். 

துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.
 
வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. 
 
துளசி சாறு சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
 
எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.
 
இத்துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்த்மா, இளைப்பு நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும்,  வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு.
 
வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச்சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும். கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை  இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். 
 
வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. 
 
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதுகுவலி மற்றும் மூட்டுவலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...?