Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல நோய்களை குணமாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆவாரம் பூ !!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (13:31 IST)
ஆவாரைச் செடியில் எல்லாவிதப் பாகங்களுமே மருத்துவத்தில் பயன் அளிப்பதாகும். ஆவாரம் பூ ஆண்குறி எரிச்சல் ஆகிய குறைபாடுகள் இருந்தால் ஆவாரம் பூவை மணப்பாகு செய்து சாப்பிட்டால் நிவர்த்தியாகும்.


உடலில் நமைச்சல் இருந்து தொல்லைகொடுத்தால் ஆவாரம் பூவுடன் பச்சைப் பயறு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் குணமாகும். நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அருமருந்தாக ஆவாரம் விதை விளங்குகிறது.

எலும்புருக்கி நோயினால் அவதிப்படுபவர்களுக்கு ஆவாரம் இலைச் சாறு மாமருந்தாக விளங்குகிறது. ஆவாரம் இலைகளைத் தேவையான அளவுக்குக் கொண்டுவந்து குளிர்ச்சியான தண்ணீரைத் தெளித்து, இடித்து சாறாகப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். இந்த சாறை அரைலிட்டர் அளவுக்கு எடுத்துக் கொண்டு தினசரி காலை, மாலை என இருவேளை குடித்துவரவும். இதனால் எலும்புருக்கி எனும் நோய் நீங்கும்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தால் இதன் பிசின் 5 கிராம் முதல் 8 கிராம் வரை நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் பொதுவாக நீரிழிவுக்கு ஆவாரம் பூ நல்ல பலனைக் கொடுக்கிறது. நீரிழிவுக்கு ஆவாரம் பூ சாறுடன் ஆவாரம் பட்டை, கொன்றைப் பட்டை நாவல்பட்டை, கடல்நுரை, கோஷ்டம் ஆகியவற்றை இடித்துப் பிழிந்து ஆவாரம் பூ சேர்த்துக் காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதனை வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் நன்கு குணமாவதை உணரலாம்.

ஆவாரம் பூ பானம் சிறுநீர் கடுப்பு இருக்கும் போது அதை குறைக்க செய்கிறது. இதனுடைய வேரிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. நீரிழிவு நோய் கொண்டிருப்பவர்களுக்கு சிறுநீரகம் சேதமாகாமல் பாதுகாக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments