Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடல் வலிமைக்கு உதவும் செம்பருத்தி பூக்கள் எப்படி...?

Advertiesment
Hibiscus Flowers
, புதன், 7 செப்டம்பர் 2022 (10:51 IST)
செம்பருத்திப் பூக்கள் இரண்டு வகையாக இருப்பதுண்டு. ஒரு வகை அடுக்குச் செம்பருத்தி; மற்றது தனி இதழ்களை உடைய அகலச் செம்பருத்தி. செம்பருத்திப் பூவை பச்சையாகவே சாப்பிடலாம். கொழகொழப் பாகவும், சிறிது இனிப்பாகவும் இருக்கும். இதன் தளிர்களினால் செய்த கஷாயம் இரத்த புஷ்டியை அளிக்கும்.


பெண்களுக்கு உண்டாகும் கர்ப்ப வியாதிகளையும், சிறுநீர் சம்பந்தமான சகல நோய்களையும் இந்தப் பூவின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க 2, 3 செம்பருத்திப் பூக்களை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாக சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்தலாம். அதனால் உடல் உஷ்ணம் குறைந்து விடும். சாதாரண சுரங்களும் இந்நீரைக் குடித்தால் குணமாகும்.

சித்தர்கள் இந்தப் செம்பருத்திப்பூவை தங்கபஸ்பம் என்ற பெயர்கொண்டு அழைத்து வந்தனர்.  தோல் நோய் வராமல் பாதுகாக்க காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன், ஆவாரம்பூ பாசிப்பயிறு, கறிவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்பிற்க்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தடுக்கும்.

ஆண்மை பெருக்கத்திற்கும் உடல் வலிமைக்கும் நல்ல பலனை அளிப்பது செம்பருத்திப் பூவாகும். ஆகையினால் இந்தப் பூவைச் சூரணமாக்கி பயன்படுத்திப் பலன் பெறலாம்.

தேவையான அளவு செம்பருத்திப் பூக்களைக் கொண்டு வந்து பூக்களின் மத்தியில் உள்ள மகரந்தக் காம்புகளை மட்டும் ஆய்ந்து தனியாக எடுத்துக் கொண்டு வெய்யிலில் உலர்த்திக் கொள்ளவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 ஆயிரமாக நீடித்து வரும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!