Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...?

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (12:27 IST)
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. மாலும் சளி அல்லது ஜலதோஷம் உள்ளவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து அல்லது சுண்டைக்காய் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.


கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, ஓமம், வெந்தயம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து, நன்கு காயவைத்து, வறுத்து, அரைத்து தூள் செய்து, இதனை 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோருடன் கலந்து இரண்டு நாட்கள் காலை, மாலை என இரண்டு வேளை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு, சீதபேதி நிற்கும்.

ஜலதோஷம் மற்றும் சளி பிடித்த காலத்தில் சிலருக்கு குரல் கட்டிக்கொண்டு சரியாக பேச முடியாமல் போகிறது. சிலருக்கு வேறு சில காரணங்களால் குரல் வளம் குறைகிறது. இவர்கள் சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் குரல் வளம் மேம்படும்.

எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்படுகிறது. சுண்டை வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் நீங்கும்.

கடுமையான மலச்சிக்கலே மூலம் நோய் வருவதற்கு பிரதான காரணமாக இருக்கிறது. அதேபோல் அதீத உடல் உஷ்ணம் மற்றும் அதிக அளவு கார உணவுகள் சாப்பிடுவதாலும் மூலம் உருவாகிறது. இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் சேர்த்து குழம்பு வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும்.

சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி இரத்தம் சுத்தமாகும். உடல்நலம் சரியில்லாத சமயங்களில் பலருக்கும் நாக்கில் உணவின் சுவை அறியும் திறன் சற்று குறைந்து விடுகிறது. இவர்கள் தினமும் சிறிதளவு சுண்டக்காயை பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் நாக்கில் சுவை அறியும் திறன் மீண்டும் அதிகரிக்கும். எச்சிலை நன்கு சுரக்க செய்து செரிமானத்தை மேம்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments