தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் உணவு வகைகள் எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். கோடை காலங்களில் சரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதுகுறித்து காண்போம்..
-
தைராய்டு உள்ளவர்கள் பொதுவாக ஓவனில் சமைக்கப்பட்ட உணவுகள், பீட்சா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
-
பரங்கிக்காய் விதையில் உள்ள ஜிங்க் சத்து தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு முக்கியமான சத்தாகும்.
-
கருவேப்பிலையில் உள்ள காப்பர் சத்து தைராக்சின் உற்பத்தியை ஊக்குவிப்பதால் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
-
தண்டுக் கீரையில் உள்ள செலினியம் சத்து டி4-ஐ டி3 ஆக மாற்றுவதால் தண்டுக் கீரை எடுப்பது நல்லது.
-
கோடை காலத்தில் குளிர்ச்சி அளிக்கும் சப்ஜா விதைகளை எடுத்துக் கொள்வதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
-
புளிக்காத தயிர் சாப்பிடுவதன் மூலம் அயோடின் சத்தயும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம்.
-
பாசிப்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் தைராய்டு பிரச்சினைகளை குறைக்கும் நல்ல உணவுகளாகும்.