தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் உணவு பழக்கங்களில் கட்டுப்பாடு பேணுவது அவசியம். சில உணவு வகைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சினையை எளிதில் குணமாக்கலாம்.
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் அதற்கான மருந்துகளை உட்கொள்வதுடன், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
காளான் உணவு சாப்பிடுவதால் உடலில் செலினியம் சத்து அதிகரிப்பதால் தைராய்டை கட்டுப்படுத்தும்.
பூண்டிலும் செலினியம் சத்து அதிகமாக உள்ளதால் பூண்டை உணவில் எடுத்துக் கொள்வது நல்லது.
ஒமேகா 3 சத்து அதிகம் கொண்ட பசலைக்கீரையை உணவில் எடுத்துக் கொள்வது தைராய்டு குணமாக உதவும்.
தைராய்டு சுரப்பி சரியாக செயல்பட முட்டை மற்றும் பாலில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து உதவுகிறது.
ஓட்ஸ், பார்லியில் உள்ள விட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து தைராய்டை குணப்படுத்தும்.
விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ள தக்காளியை சாப்பிடுவதால் உடலில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிகரிக்கும்.
அயோடின் சத்து அதிகம் நிறைந்துள்ள ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவது தைராய்டு நோயில் இருந்து குணமாக நல்ல உணவு.
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர்கள் பரிந்துரை பெற்று சரியான உணவு முறையை கடைபிடிக்க வேண்டும்.