Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தரமான மதுபானங்கள் குறைந்த விலையில் விற்கப்படும் -சந்திரபாபு நாயுடு

Chandra Babu Naidu

Sinoj

, திங்கள், 8 ஏப்ரல் 2024 (16:50 IST)
ஆந்திரம் மாநிலத்தில், ஜெகன்மோகன் ரெட்டி கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார் என்று சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.
 
விரைவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதேசமயம் 4 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.
 
இதில், ஆந்திரவில்  நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் மே 13 அன்று ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது.
 
இந்த நிலையில், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 
எனவே மக்களவைக் கவர வேண்டி விதவிதமான வாக்குறுதிகளை இருகட்சி தலைவர்களும் அறிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், முன்னாள் முதல்வரு தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் மலிவு விலையில் தரமான மது தருவோம் என்ற வாக்குறுதியும் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
 
''கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமபடுத்துவதாக கூறி ஆட்சியைப் பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி, ஆட்சியில் அமர்ந்தும் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார். அனைத்து பொருட்களின் விலையும் அபரிமிதமாக உயர்ந்துள்ள நிலையில், உழைக்கும் மக்கள் விரும்பும் மதுபானங்களின் விலையும்தான். 
 
ஏழை எளிய மக்களுக்கான விலையில் இருந்த மதுவை விலை உயர்த்திவிட்டனர். விலையை   உயர்த்தினாலும் அதன் தரத்தையாவது   உயர்த்தி இருக்கலாம். ஆனால், அதிக லாபம் ஈட்டும் நோக்கில், தரமற்ற  மதுவை விநியோகித்து, நம் மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறார்கள். எனவே தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமையும்போது, தரமானது மட்டுமின்றி குறைந்த மற்றும் தரமான மதுபானத்தை அளிக்க உறுதியளிப்பதாக'' தெரிவித்துள்ளார்.
 
வரும் தேர்தலில் தெலுங்கு தேசம்- பாஜக- ஜனசேனா கட்சிகள் கூட்டணி உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயர்கிறதா பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம்.? 25% வரை உயர்த்த வாய்ப்பு..!!