3200 கோடி மதுபான ஊழல் செய்ததாக ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இருக்கும் தகவல், ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஆட்சியில் 3600 கோடி ரூபாய் மதுபான ஊழல் வழக்கில் அந்தக் கட்சியை சேர்ந்த எம்.பி. மிதுன் ரெட்டி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில், இந்த விசாரணைக் குழு இன்று மிதுன் ரெட்டியை கைது செய்துள்ளது. மேலும், முன்னாள் துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான நாராயண சுவாமிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு இதுவரை 40 பேரை குற்றவாளியாக சேர்த்து, 11 பேரை கைது செய்துள்ள நிலையில், இன்னும் கைது நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுவது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிதுன் ரெட்டியிடம் சிறப்பு விசாரணைக் குழு பல மணி நேரம் விசாரணை செய்ததாகவும், அதனை அடுத்து விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"இது ஒரு பழிவாங்கும் சதித்திட்டம் என்றும், சந்திரபாபு நாயுடுவின் பொய்யை நாங்கள் வெளிப்படுத்துவோம் என்றும், ஆந்திரா அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அந்த அரசின் தோல்விகளை குறிப்பதாகவும்" ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லாடி விஷ்ணு என்பவர் கூறியுள்ளார்.