Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

Advertiesment
தெலுங்கானா

Mahendran

, செவ்வாய், 8 ஜூலை 2025 (12:13 IST)
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், "என்னுடைய தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்?" என சிவபெருமானுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா என்ற மாவட்டத்தை சேர்ந்த ரோஹித் என்ற 25 வயது இளைஞர், எம்.எஸ்.சி. படித்து முடித்துவிட்ட நிலையில், பி.எட். படித்து வந்துள்ளார். அவருக்கு மருத்துவலாகும் கனவு இருந்த நிலையில், அதை அடைய முடியாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், அவர் சிவபெருமானுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "சிவபெருமானே, உன் ஞானம் அனைத்தையும் வைத்துக்கொண்டு இப்படித்தான் என் தலைவிதியை எழுதினாயா? உன் சொந்த மகனுக்கு என்றால் இப்படி தலைவிதியை எழுதி இருப்பாயா? நாங்கள் உன் குழந்தைகள் இல்லையா? 
 
நான் மரண வேதனை விட அதிக வேதனையுடன் வாழ்ந்து வருகிறேன். பலமுறை முயற்சி செய்தும் நான் சோர்வடைந்து விட்டேன். ஒருவேளை இதுவே என் தலைவிதியாக இருக்கலாம்" என்று எழுதிவிட்டு, அதன் பிறகு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாக ரோஹித் சோகமாக இருந்ததாகவும், தனது வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருப்பதாகப் புலம்பிக்கொண்டிருந்ததாகவும் அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!