Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆரோக்ய சேது செயலியை ஹேக் செய்த இளைஞர்! பாதுகாப்பு குறித்து அச்சம்!

ஆரோக்ய சேது செயலியை ஹேக் செய்த இளைஞர்! பாதுகாப்பு குறித்து அச்சம்!
, வெள்ளி, 15 மே 2020 (07:44 IST)
மத்திய அரசு உருவாக்கியுள்ள ஆரோக்ய சேது செயலியின் பாதுகாப்புத் தன்மை குறித்து இப்போது கேள்வி எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கொரோனா தாக்கம் உள்ள பகுதிகள் எவையெவை என கண்டறிவதற்காகவும், மக்கள் அவற்றை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவும் “ஆரோக்ய சேது” என்ற மொபைல் செயலியை மத்திய அரசு ஏப்ரல் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த செயலி பாதுகாப்பு குறைவானது என்றும், எளிதில் ஹேக் செய்யக்கூடிய தனிநபர் விபரங்களை கண்காணிக்கும் செயலி என்றும் காங்கிரஸ் எம் பி ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். இது குறித்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எலியாட் அல்டர்சன் என்ற ஹேக்கர், இந்த செயலியால் 90 மில்லியன் இந்தியர்களுடைய தனிநபர் சுதந்திரம் ஆபத்தில் இருக்கிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த செயலியை ஹேக் செய்து காட்டியுள்ளார். இந்த செயலியில் கேட்கப்பட்டுள்ள பெயர், வயது, பாலினம், பயண வரலாறு மற்றும் வைரஸ் அறிகுறி சோதனைகள் ஆகியவற்றை நிரப்பாமல் எங்கே செயலியினுள் நுழைந்துவிட்டார். இந்த செயலி மிகவும் சுமாரான செயலி என அவர் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பவர்களை இந்த செயலியைக் கட்டாயமாக்க சொல்லியுள்ளது. இந்த செயலியை இதுவரை 9 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொழுப்பு கூடிவிட்டது தலைகனச் செயலர் சண்முகத்திற்கு: முரசொலியின் காரசாரமான கட்டுரை