சமீபத்தில் தலைமைச் செயலாளரை சந்தித்து திமுக எம்பிக்கள் டிஆர் பாலு மற்றும் தயாநிதி உள்பட ஒருசில திமுக பிரமுகர்கள் சந்தித்தபோது தலைமைச் செயலாளர் தங்களை அவமரியாதை செய்ததாகவும், தாழ்த்தப்பட்டோர் போல் தங்களை நடத்தியதாகவும் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியிருந்தார். தயாநிதி மாறனின் இந்த கருத்து பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன
இந்த நிலைய்ல் தற்போது முரசொலியில் தலைமைச் செயலாளர் குறித்து காரசாரமான தலையங்கம் ஒன்று பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற அதிமுக குழு தலைவர் டிஆர் பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் லட்சக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு எப்படி மரியாதை தரவேண்டும் என்பது கூட ஒரு ஐஏஎஸ் அதிகாரி தெரியவில்லையா? நடவடிக்கை எடுக்கிறோம் பரிசீலிக்கிறோம் என்று சொல்லியிருக்கலாமே
உங்களைப் போன்ற ஆட்கள் ஆட்களிடம் இதுதான் பிரச்சனை என்று சொல்லி இருக்கிறார் சண்முகம். எது பிரச்சனை? மக்களிடம் குறை கேட்டது பிரச்சனையா? அவர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு போய் கொடுத்து பிரச்சனையா? அவர்களுக்கு உணவு கொடுத்தது பிரச்சனையா? மனு வாங்கியது பிரச்சனையா? என்று முரசொலி தலையங்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளது
மேலும் எடப்பாடி கூட்டத்தில் சேர்ந்து, கொழுப்பு கூடிவிட்டது தமிழ்நாட்டின் தலைகனச் செயலர் சண்முகத்திற்கு என்றும், ஜூலையோடு பதவி முடியவுள்ள நிலையில், பதவி நீட்டிப்பு ஆசையில் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றும், வாலாட்டிக்கொண்டிருக்கும் இன்னும் பல “சண்முகங்களின்” கணக்கும் எடுக்கப்பட்டுதான் வருகிறது என்றும் அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தலையங்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது