Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைனில் திருமனம்… நாகினி சீரியல் நடிகை அதிரடி அறிவிப்பு

Advertiesment
ஆன்லைனில் திருமனம்… நாகினி சீரியல் நடிகை அதிரடி அறிவிப்பு
, வெள்ளி, 15 மே 2020 (07:32 IST)
நாகினி சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சயந்தினி கோஷ் ஆன்லைன் மூலமாக தனது காதலரைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சி சீரியல்களான மகாபாரதம் மற்றும் நாகினி ஆகியவற்றின் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சயந்தினி கோஷ். பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்துகொண்டதன் மூலம் இந்தியா முழுக்க இவருக்கு ரசிகர்கள் கிடைத்தனர். இந்நிலையில் இவர் தனது நீண்டநாள் காதலரான அனுராக் திவாரி என்பவரைக் கல்யாணம் செய்யும் முடிவில் இருந்தார்.

ஆனால் அதற்குள் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விட்டதால் இப்போது திருமணம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் லாக் டவுன் சூழ்நிலைகள் சரியாகவில்லை என்றால் ஆன்லைன் மூலம் முகம்பார்த்து திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவில் இருப்பதாக அறிவித்துள்ளார்.

கொரோனா பிரச்சினைகள் முடிவடைந்த பின்னர் முறைப்படி திருமணத்தைப் பதிவு செய்யலாம் எனத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். கொரோனா காரணமாக பல திருமணங்கள் இதுபோல எளிமையாக நடப்பதால் திருமணத்தைச் சார்ந்து தொழில் செய்து வருபவர்களான திருமண மண்டப உரிமையாளர்கள், வீடியோ கிராபர்கள், கேட்டரிங் சர்வீஸ் வைத்திருப்பவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவின் மனைவிக்காக காத்திருக்கிறேன் - நடிகை பிந்துமாதவி ட்வீட்!