உத்தர பிரதேசத்தில் கடன் வாங்கிவிட்டு திரும்ப தராத மாணவர்களை இளைஞர்கள் சிலர் அடைத்து வைத்து அருவருக்கத்தக்க வகையில் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் விடுதியில் தங்கி நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். அந்த இளைஞர் அதே விடுதியில் படிக்கும் மாணவர்கள் சிலரிடம் கடனாக பணம் பெற்று அதை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். கடன் தொகையை சக மாணவர்கள் கேட்டபோது விரைவில் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் ரூ.20 ஆயிரம் கடனாக கொடுத்துவிட்டு வட்டியுடன் சேர்த்து ரூ.50 ஆயிரமாக திரும்ப தர வேண்டும் என கேட்டுள்ளனர்.
மேலும் இளைஞர் பணத்தை திரும்ப தராததால் ஆத்திரமடைந்த அவர்கள் மாணவரை ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளனர். அங்கு வைத்து அவரை நிர்வாணமாக்கி, அந்தரங்க உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிடுவது, தலை முடியில் நெருப்பு வைப்பது, அடித்து உதைப்பது என பல்வேறு சித்ரவைதைகளுக்கு ஆளாக்கியுள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த கொடுமைகளை அனுபவித்த மாணவர் மோசமான நிலையில் ஊர் வந்து சேர்ந்துள்ளார். மாணவரை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உண்மை தெரிய வந்ததும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாணவரை கொடுமைப்படுத்திய தனய், அபிஷேக் வர்மா, யோகேஷ், சஞ்சீவ் யாதவ், ஹர்கோவிந்த் திவாரி மற்றும் ஷிவா த்ரிபாதி உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர்.