கேரளாவில் தேர்தல் முடிவடைந்த நிலையில் திடீரென அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று குடும்பத்துடன் விமானம் மூலம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளதாகவும் இந்தோனேசியாவில் 12ஆம் தேதி வரை, சிங்கப்பூரில் 18ஆம் தேதி வரை இருக்கும் அவர்கள் அதன் பின்னர் துபாய் சென்று விட்டு மே 21ஆம் தேதி தான் கேரளா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா விஜயன், மீனா விஜயனின் கணவர் முகமது ரியாஸ் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சுற்றுலாவுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் முதல்வர் பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்காமல் திடீரென வெளிநாடு சென்று இருப்பது ஒரு மோசமான முன்னுதாரணம் என்றும் திடீரென மாநிலத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு யார் பதில் சொல்வது என்றும் எந்த விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் யாரிடமும் பொறுப்பை ஒப்படைக்காமல் பினராயி சென்றுள்ளார் என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது