ராமர் கோவில் வரும் பிரதமர்: பாதுகாப்பு பணிக்கு வரும் இளம் படையினர்!

சனி, 1 ஆகஸ்ட் 2020 (10:43 IST)
ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா, பிரதமரின் பாதுகாப்பு பணியில் இளம் போலீசாரை மட்டும் பயன்படுத்தத் திட்டம் என தெரிகிறது. 
 
அயோத்தி வழக்கில் கடந்த ஆண்டில் ராமர் கோவில் கட்ட அனுமதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  
 
ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகஸ்டு 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்காக பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துக்கொள்ள உள்ளனர். இதில் பிதமரின் பாதுகாப்பு பணிக்கு 45 வயதுக்கு குறைவான கொரோனா பாதிப்பு இன்றி முழுமையான தனிமைப்படுத்தலில் உள்ள காலவர்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 17 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!