Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அயோத்தி ’ராம ஜென்ம பூசாரிக்கு’ கொரோனா உறுதி !

அயோத்தி ’ராம ஜென்ம பூசாரிக்கு’ கொரோனா உறுதி !
, வியாழன், 30 ஜூலை 2020 (17:59 IST)
ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க அனைத்து முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ராமர் ஜென்ம பூமியின் பூசாரிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்டு 5ம் தேதி அடிக்கல் நடும் விழா நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைக்க இருக்கிறார். இந்த விழாவில் பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பகவத் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்க இருப்பதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே இந்த விழாவில் பங்கேற்பார் என கூறப்பட்டுள்ள நிலையில் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்விழாவில் பங்கேற்பது மதசார்பின்மைக்கு எதிரானது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

எனினும் கொரோனா பாதிப்புகள் உத்தர பிரதேசத்தில் அதிகரித்து வரும் நிலையில் ஒரு சில மாநில முதல்வர்களே இதில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 5 ஆம்  தேதி ராமா ஜென்ப பூமியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல்நாட்டப்படுவதை ஒட்டி அங்கு தூய்மைப்  பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 300 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ராமர் ஜென்ம பூமியின்  பூசாரி  பிரதீப் தாஸ் என்பவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இவர் தினமும் அங்கு  பூஜைகள் மேற்கொள்பவர் ஆவார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய கல்விக்கொள்கை : வைரலாகும் சூர்யாவின் அறிக்கை !