Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

17 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!

Advertiesment
17 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!
, சனி, 1 ஆகஸ்ட் 2020 (10:11 IST)
இந்தியாவில் 17 லட்சத்தை கொரோனா பாதிப்பு நெருங்குவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 16 லட்சம் பாதிப்புகளை தாண்டியுள்ள இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 16,38,870லிருந்து 16,95,988 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,57,394லிருந்து 10,95,647 ஆக  உயர்வு. 
 
மேலும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747லிருந்து 36,511 ஆக உயர்வு. குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 57,118 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் மாதத்தில் 5 சண்டேஸ்: முழு பொதுமுடக்கத்தால் வேதனை!