Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

Advertiesment
திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

Siva

, செவ்வாய், 25 மார்ச் 2025 (17:39 IST)
திகார் சிறைச்சாலை தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இருப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக புறநகர் பகுதிக்கு மாற்ற இருப்பதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.
 
திகார் சிறைச்சாலை 1958 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய சிறைச்சாலைகளில் ஒன்றாக இருந்து, 400 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் ஒன்பது மத்திய சிறைச்சாலைகளை உள்ளடக்கியது.
 
இந்நிலையில், முதல் மந்திரி ரேகா குப்தா இன்று டெல்லி சட்டசபையில் பட்ஜெட்டை வெளியிட்டார். அப்போது அவர், "திகார் சிறைச்சாலை நகரின் எல்லைக்கு வெளியே மாற்றப்படும்" என அறிவித்தார். 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், இதற்கான ஆய்வு மற்றும் ஆலோசனை பணிகளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
திகார் சிறைச்சாலை தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இருப்பதால், பாதுகாப்பு ரீதியாக மாற்றம் தேவையானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!