தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே வரி என்ற திட்டம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே வரி என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர் அவர்களிடம் பேசிய போது மாநிலங்களின் உரிமை காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் ஒரே நாடு ஒரே வரி திட்டம் சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே வரி என்பது போன்ற ஸ்லோகங்களை வைத்து அரசியல் செய்வது சுலபம் என்றும் ஆனால் அதை செயல்படுத்துவது கடினம் என்றும் அவர் தெரிவித்தார்.