Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

Advertiesment
ADMK

Prasanth Karthick

, வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (10:29 IST)

பாஜக அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்துள்ள நிலையில் இரட்டை இலை வழக்கு இறுதி விசாரணைக்கு தேர்தல் ஆணையத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், தமிழக பாஜகவிற்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக பாஜகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

மறுபுறம் அதிமுக, பாஜக கூட்டணிக்குள் வர ஓபிஎஸ், டிடிவி தினகரன் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பதால் பாஜக சிக்கலில் உள்ளது. அதிமுகவில் அதிருப்தியுடன் காணப்படுவதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நிர்மலா சீதாராமனை டெல்லியில் ஒருமுறை, சென்னையில் ஒருமுறை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

 

இவையெல்லாம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்தான் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக சென்னை வந்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவரை பார்க்க ஈபிஎஸ், ஓபிஎஸ், செங்கோட்டையன், பாமக அன்புமணி உள்ளிட்ட பலர் நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதற்கு நடுவே இரட்டை இலை சின்னம் மீதான இறுதி விசாரணையை தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த 15 மனுக்கள் மீதான விசாரணை சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி நடந்து வருகிறது. இந்த வழக்குகள் முடியும் வரை சின்னத்தை முடக்க ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

 

இந்நிலையில் இன்று அமித்ஷாவுடன் அதிமுக உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்களும் சந்திக்கும் நிலையில், இந்த சந்திப்புக்கும், இரட்டை இலை சின்ன விசாரணைக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. அதனால் இன்றைக்கு ஒரு முக்கியமான முடிவு வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்த போவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!