Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி உபியில் மாஃபியா கும்பல் மிரட்ட முடியாது: முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை..!

Advertiesment
இனி உபியில் மாஃபியா கும்பல் மிரட்ட முடியாது: முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை..!
, செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (18:45 IST)
இனி உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாஃபியா கும்பல் மிரட்ட முடியாது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரதேச மாநிலத்தில் தாதாவாக இருந்தாலும் அதிக் அகமது மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசிய போது கலவரங்களுக்கு பெயர் போன மாநிலம் என உத்தரபிரதேசம் இருந்த நிலையில் தற்போது 700க்கும் மேற்பட்ட கலவரங்களை அரசு அடக்கி உள்ளது என்றும் ஆகவே மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
 
இனி உத்தரபிரதேசம் மாநிலத்தில் எந்த தொழிலதிபர்களையும் மாஃபியா கும்பல் மிரட்ட முடியாது என்றும் கடந்த காலத்தில் நிகழ்ந்தது போல் சம்பவங்கள் இனி நடக்காது என்றும் எனவே மாநிலத்தில் முதலீடுகள் மேற்கொள்ளவும் தொழிற்சாலை அமைக்கவும் ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு ஏசி பேருந்துகள்: போக்குவரத்து துறை அறிவிப்பு..!