Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அளவில் நம்பர் 1… ஃபார்ஸி வெப் சீரிஸ் படைத்த சாதனை!

இந்திய அளவில் நம்பர் 1… ஃபார்ஸி வெப் சீரிஸ் படைத்த சாதனை!
, திங்கள், 27 மார்ச் 2023 (16:07 IST)
இந்தியில் பேமிலிமேன் சீசன்கள் மூலம் பிரபலமான வெப்சிரிஸ் இயக்குனர்களாக அறியப்படுபவர்கள் ராஜ் மற்றும் டிகே. இவர்கள் இணைந்து உருவாக்கி தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள 8 எபிசோடுகள் கொண்ட வெப்சிரிஸ்தான் “ஃபார்சி (Farzi)”.

மும்பையில் வாழ்ந்து வரும் திறமைமிக்க ஓவியன் சன்னி (ஷாகித் கபூர்), யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு துல்லியமான கள்ள நோட்டுகளை வடிவமைத்து அச்சிட, அவரை கண்டுபிடிக்கும் போலீஸாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பரவலாக பார்வையாளர்களை சென்றடைந்தது இந்த தொடர்.

இந்நிலையில் இப்போது இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஃபார்ஸி உருவாகியுள்ளது. இது சம்மந்தமாக ஆர்மேக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் 3 கோடியே 70 லட்சம் பேர் இந்த தொடரை பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவதார் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!