Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 15 April 2025
webdunia

Yes Bank வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி....!!!

Advertiesment
யெஸ் பேங்க்
, புதன், 11 மார்ச் 2020 (11:53 IST)
யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் மின்னணு பண பரிமாற்ற சேவை வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
 
தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வரும் நிலையில் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் தற்போது கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.  
 
மேலும், ஏப்ரல் 3 ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதோடு, யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ முன்வந்தது.
 
மேலும், ஒரு மாத காலத்திற்கு யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுப்பதில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.  ஆனால், தற்போது கட்டுப்பாடுகள் தளத்தப்பட்டுள்ளது. ஆம், யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் மின்னணு பண பரிமாற்ற சேவை வழங்கப்பட்டுள்ளது. 
 
வங்கியின் ஐஎம்பிஎஸ் (IMPS), என்இஎப்டி (NEFT) போன்ற மின்னணு பண பரிமாற்ற சேவைகள் மீண்டும் இயங்கும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு, ஏ.டி.எம்.களும் முழுமையாக இயங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடியாரை ஏன் எதிர்த்தீங்க?: ஒரு மாசத்துல பதில் சொல்றோம்! – ஓபிஎஸ் அவகாசம்