ஒரே வாரத்தில் எஸ் வங்கி பழைய நிலைக்கு வரும் என ஸ்டேட் வங்கி தலைவர் பேட்டி அளித்துள்ளது அவ்வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
எஸ் வங்கி சமீபத்தில் நிதி நெருக்கடி காரணமாக தத்தளித்த போது அதை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது என்பது தெரிந்ததே. வாராக் கடன்கள் காரணமாக தத்தளித்து வரும் எஸ் வங்கியை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி 49 சதவீத பங்குகளை வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் எஸ் வங்கி மீண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இதனை அடுத்து எஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதம் ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடு இன்னும் ஒரு சில நாட்களில் நீக்கப்படும் என்றும் எஸ் வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதற்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் எனவே எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் ஸ்டேட் தலைவர் ரஜ்னிஷ்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்
எஸ்.வங்கியின் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமமும் நிச்சயமற்ற தன்மையும் குறுகிய காலத்துக்கு மட்டுமே என்றும் மிக அதிக பட்சம் ஒரே வாரத்தில் எஸ் வங்கி பழைய நிலைக்கு திரும்பி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எஸ் வங்கி விவகாரத்தில் எஸ்பிஐ தலையிட்டதால் வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பதும் மிக விரைவில் எஸ் வங்கி தனது பழைய நிலைக்கு திரும்பி வரவேண்டும் என்றும் அதன் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்