Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாதா? அதிர்ச்சி தகவல்

யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாதா? அதிர்ச்சி தகவல்
, வெள்ளி, 6 மார்ச் 2020 (07:47 IST)
யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாதா?
தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வரும் நிலையில் அதன் நிர்வாகத்தை  ரிசர்வ் வங்கி தனது  கட்டுப்பாட்டின் கீழ் தற்போது கொண்டுவந்துள்ளது.
 
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘யெஸ் பேங்க்’ ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், கடுமையான கடன்சுமையில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
 
மேலும் யெஸ் பேங்க்கின் நிர்வாகக் குழு முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவதாகவும், யெஸ் பேங்க்கினை நிர்வாகம் செய்ய எஸ்பிஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை யெஸ் வங்கியில் டெபாசிட் செய்திருப்பவர்கள் தங்களுடைய பணத்தில் ரூ.50,000 வரையே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதுவும் மருத்துவச்செலவு, திருமணம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு, ரிசர்வ் வங்கி  அனுமதியுடன் தான் பணத்தை எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் பரவும் முன்பே எச்சரித்த மருத்துவரை மரணத்துக்கு பின் கௌரவித்த சீனா