Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரீசார்ஜ் வித் கேஷ்பேக்: அசத்தல் ப்ளானுடன் ஏர்டெல்!!

ரீசார்ஜ் வித் கேஷ்பேக்: அசத்தல் ப்ளானுடன் ஏர்டெல்!!
, வியாழன், 2 ஜனவரி 2020 (17:40 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக்குடன் கூடிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டி மற்றும் தொடர் நஷ்டத்திற்கு இடையில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது ரூ. 279 , ரூ. 379 என 2 புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. 
 
ஏர்டெல் ரூ. 279 ரீசார்ஜ்: 
புதிய ரூ. 279 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.ரூ. 4 லட்சத்திற்கான உயிர் காப்பீடு திட்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்டாக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.  
 
ஏர்டெல் ரூ. 379 ரீசார்ஜ்: 
புதிய ரூ. 379 சலுகையில் மொத்தம் 6 ஜி.பி. அதிவேக டேட்டா, 900 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வின்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டிரீம் செயலியை பயன்படுத்தும் வசதி மற்றும் ஃபாஸ்டாக் வாங்குவோருக்கு ரூ. 100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்: அரசு அலுவலர்கள் தேர்தல் பணிகள் புறக்கணிப்பு!