யெஸ் வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
யெஸ் வங்கி கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வரும் நிலையில் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் ஒரு மாத காலத்திற்கு, ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் எனவும், அவசர தேவை என்றால் வங்கி மேலாளரின் அனுமதியுடன் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம் எனவும் வாடிக்கையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “யெஸ் வங்கியில் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பணமும் பாதுகாப்பாக உள்ளது. யெஸ் வங்கி முதலீட்டாளர்கள்யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உத்திரவாதம் அளித்துள்ளார்” என கூறியுள்ளார்.