Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மராத்தான்…

Advertiesment
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மராத்தான்…

Arun Prasath

, வியாழன், 5 மார்ச் 2020 (16:20 IST)
ஜெயின் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த மராத்தான் போட்டி நடைபெறவுள்ளது.

வருகிற மார்ச் 08 ஆம் தேதி, ஜெயின் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பாக, மேஜர் ஜெனரல் என்.எஸ்.ராஜ்புரோஹித்துடன் இணைந்து, “மை கன்ட்ரி ரன் 5th எடிஷன்” என்ற மராத்தான் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி கர்நாடகா மாநில பெங்களூரில் ”நைஸ் டோல் பிளாசா”, 100 அடி ரோடு, கோசகரஹல்லி, பி எஸ் கே III ஸ்டேஜில், காலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது.

இப்போட்டி சுற்றுச்சுழல் விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கிய இந்தியா என்ற அடிப்படையில் நடைபெறுகிறது. இதில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்களுக்கான அம்சமாக “எலைட் 10 கே” உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்களுக்காக “ஓபன் 10 கே” உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, சிறப்பம்சமாக ”கூல் 5 கே” திட்டமிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உண்மையானது வடிவேலு காமெடி – வீட்டுக்கு சாப்பிட சென்ற கைதி தப்பித்து ஓட்டம் !