ராய்ட்டர்ஸின் ட்விட்டர் கணக்கை இந்திய அரசாங்கம் முடக்க எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என மத்திய அரசு சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட நிலையில், அந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ள எக்ஸ் நிர்வாகம், ராய்ட்டர்ஸ் உட்பட 2,355 கணக்குகளை முடக்குமாறு இந்திய அரசு தங்களை கேட்டுக்கொண்டது என்று தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராய்ட்டர்ஸ் உள்பட சில கணக்குகளை மத்திய அரசு முடக்கியதாக கூறப்பட்ட செய்திக்கு விளக்கம் அளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் "ராய்ட்டர்ஸ் உள்பட எந்த ஒரு கணக்கையும் முடக்க இந்திய அரசு எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ராய்ட்டர்ஸ் உட்பட சர்வதேச செய்தி நிறுவனங்களின் 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு தங்களுக்கு உத்தரவிட்டதாக எக்ஸ் கூறியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் பத்திரிகைக்கு எதிரான நடவடிக்கை அதிகமாகி வருவதை பார்த்து கவலைப்படுகிறோம் என்றும், நீதிமன்றங்கள் மூலம் இதற்கான சட்ட தீர்வுகளை பெற திட்டமிட்டுள்ளோம் என்றும் எக்ஸ் தெரிவித்துள்ளது.
எக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.