Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலையில் மூன்று குண்டுகளோடு 7 கிலோ மீட்டர் கார் ஓட்டிய அதிசயப் பெண்மணி !

Advertiesment
தலையில் மூன்று குண்டுகளோடு 7 கிலோ மீட்டர் கார் ஓட்டிய அதிசயப் பெண்மணி !
, சனி, 18 ஜனவரி 2020 (08:32 IST)
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது சுமீத் கவுர் எனும் பெண்மணி தலையில் 3 புல்லட்கள் இருக்க 7 கிலோ மீட்டர் கார் ஓட்டிச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது பெண்மணி சுமித் கவுர். இவரது தந்தை மரணத்தின் போது இவருக்கு 15 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்துள்ளார். அதை அபகரிக்க சுமித்தின் சகோதரர் முயன்றுள்ளார். ஆனால் அதற்கு சுமித் சம்மதிக்கவில்லை.

இது சம்மந்தமாக சுமித் மேல் அவரது சகோதரர் கோபத்தில் இருந்துள்ளார். இதையடுத்து சம்பவ தினத்தன்று  சுமித்தின் சகோதரரும் அவரது 10 ஆவது படிக்கும் மகனும் சுமித்தையும் அவரது தாயாரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சுமித்தின் தலையில் 3 குண்டுகள் பாய்ந்துள்ளன. அவரது தாயாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. குண்டுகள் தலையில் இருந்த படியே அவர் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று இது சம்மந்தமாக புகார் அளித்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரது தலையில் இருந்த குண்டுகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த சம்பவமானது பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக-காரன்னா சும்மாவா? ரஜினிக்கு எதிர்பாரா பதிலடி கொடுத்த முரசொலி!!