Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் சாமியார் எம்.பி.க்கு விஷத்துடன் வந்த கொலை மிரட்டல்..

Advertiesment
பெண் சாமியார் எம்.பி.க்கு விஷத்துடன் வந்த கொலை மிரட்டல்..

Arun Prasath

, வியாழன், 16 ஜனவரி 2020 (15:34 IST)
பாஜக எம்.பி. பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூருக்கு விஷ ரசாயனத்துடம் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி.பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் பல சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வருவது வழக்கம். குறிப்பாக சமீபத்தில் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் பிரக்யா சிங் தாகூருக்கு கடந்த அக்டோபர் மாதம் பூனேவில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அதனை தற்போது பிரித்து படித்தபோது, அதில், ”மகாத்மா காந்தியையும் மும்பை பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்னாள் தலைவர் ஹேமந்த கார்க்கரேயையும் அவமதித்ததற்காக கடுமையான விளைவுகளை சந்திக்கப்போகிறீர்கள். உங்களை கொலை செய்வோம்” என எழுதியுள்ளது.

அந்த கடிதத்தை இஸ்லாமிய அமைப்பு ஒன்று எழுதியுள்ளதாக பிரக்யா சிங் கூறுகிறார். மேலும் அக்கடிதத்தில் விஷ ரசாயணம் தடவப்பட்டிருந்ததாகவும், அதனால் தனது கையில் அரிப்பு ஏற்பட்டு தோல் நோய் தொற்று உருவானதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் பிரக்யா சிங் தாகூரின் குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை, அவர் நாடகம் ஆடுகிறார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நரேந்திர சல்ஜா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த்: பெரியார் பேரணியில் ராமர் படம் அவமதிக்கப்பட்டதா?