Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக-காரன்னா சும்மாவா? ரஜினிக்கு எதிர்பாரா பதிலடி கொடுத்த முரசொலி!!

Advertiesment
திமுக-காரன்னா சும்மாவா? ரஜினிக்கு எதிர்பாரா பதிலடி கொடுத்த முரசொலி!!
, சனி, 18 ஜனவரி 2020 (08:20 IST)
துக்லக் பத்திரிக்கையின் 50 ஆவது ஆண்டு விழாவில் முரசொலி குறித்து பேசிய ரஜினிக்கு, பதிலடி கொடுத்துள்ளது முரசொலி நாளிதழ்.
 
துக்ளக் பத்திரிக்கையின் 50 ஆவது ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் பேசியதாவது, துக்ளக் பத்திரிகையை சோவுக்கு பிறகு குருமூர்த்தி சிறப்பாக நடத்தி வருகிறார். 
 
சோ நமக்கு பிறகு யார் இந்த பத்திரிகையை நடத்துவார் என்று  கவலைப்பட்டார். அப்போது அவர் குருமூர்த்தியிடம் கேட்டார். குருமூர்த்தி அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தாலும் அவரை கட்டாயப்படுத்தி இந்த பொறுப்பை ஒப்படைத்தார்.
 
ஒருவர் கையில் முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லி விடலாம். அதே போல், துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லி விடலாம். துக்ளக் பத்திகை வைத்திருந்ததால் அவர் அறிவாளியானாரா? அல்லது துக்ளக் படித்ததால் அறிவாளியானாரா? என்று தெரியாது என திமுகவை சீண்டி பேசினார். 
webdunia
இந்நிலையில் இதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளது முரசொலி நாளிதழ். அதில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது என்னவெனில், முரசொலி நாளிதழை வைத்திருந்தால் அவன் தமிழன், திராவிட இயக்கத் தமிழன், மனிதன் என பொருள். முரசொலி வைத்திருந்தால் சாதி, மத பேதம் பார்க்காதவன், ஆண்டான் அடிமைக்கு எதிரானவன் என பொருள் என ரஜினிக்கு முரசொலி நாளிதழ் பதிலடி  கொடுத்துள்ளது. 
 
இதற்கு முன்னர் திமுக இளைஞர் அணி செயலாளரும், முரசொலி பொருப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன் என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்பயா வன்கொடுமை வழக்கு; குற்றவாளி மேல்முறையீடு