Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்.. 13வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலி? கொலையா? விபத்தா?

Siva
வெள்ளி, 27 ஜூன் 2025 (07:30 IST)
பெங்களூருவில், நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்ற இளம்பெண் ஒருவர்,  ஒரு கட்டிடத்தின் 13வது மாடியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பரப்பன அக்ரஹாரா போலீஸ் எல்லைக்குட்பட்ட அந்த கட்டிடத்திற்கு, புதன்கிழமை இரவு தன் நண்பர்களுடன் இளம்பெண் ஒருவர் சென்றிருக்கிறார். அங்கு அவர்கள் பார்ட்டி கொண்டாட்டத்தில் இருந்தபோது, லிஃப்ட் அமைப்பதற்காக விடப்பட்டிருந்த ஆழமான பள்ளத்தில் அந்த பெண் தவறி விழுந்துவிட்டார்' என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
 
அந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்தபோது இந்த விபத்து நடந்ததாக சொல்லப்பட்டாலும், அவருடைய ஃபோனில் அப்படியான வீடியோ எதுவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இந்த சம்பவம் ஒரு விபத்து என்று போலீஸார் கருதினாலும், எல்லா கோணங்களிலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் பயமுறுத்தல் வெத்துவேட்டு.. சுமார் 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு.. திமுக ஆதரிக்குமா?

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததால் அதிருப்தி..!

மத அடையாளத்தை மறைத்து இளம்பெண்ணிடம் பழகிய நபர்: மதம் மாற மிரட்டல் விடுத்த நபர் கைது..!

சினிமாவில் நூறு பேரை அடிக்கும் விஜய், நேரில் அடிக்க முடியுமா? செல்லூர் ராஜூ கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments