கொரோனாவில் வீரியம் நாளாக நாளாக அதிகரித்த வண்ணமே உள்ளபடியால் இந்தியாவில், ஊரடங்கு தளர்த்துவது குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கை தளர்த்துவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மக்கள் ஊரடங்கு குறித்து என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியதாக நேற்று கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருவதாக தகவல் வெளியாகிறது.
மேலும், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் மற்றும் நிபுணர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அதனால் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா என்பது குறித்து மத்திய அரசு வட்டாரம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகிறது.