வாக்குரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்; சதியை முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!

Mahendran
புதன், 29 அக்டோபர் 2025 (14:27 IST)
தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை தமிழக மக்கள் இழக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
அவர் ரூ. 1,020 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 'வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்' என்பது வாக்குரிமையைப் பறிக்கும் சதியாக இருக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார். "பீகாரில் நடந்தது போல, தோல்வி உறுதி என்றால் வாக்காளர்களை நீக்கும் முயற்சியை இங்கு செய்யப் பார்க்கிறார்கள்" என்று பா.ஜ.க.வை அவர் மறைமுகமாக சாடினார்.
 
இந்த திருத்த நடவடிக்கையை தி.மு.க. தொடர்ந்து எதிர்ப்பதாகவும், இது குறித்து நவம்பர் 2-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். "வாக்கு திருட்டை முறியடித்து, தமிழ்நாட்டு மக்களின் உரிமையை காப்போம்" என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பைக் ஓட்ட டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு தேவையில்லை: ஜெலியோ இ மொபிலிட்டியின் புதிய மின்சார ஸ்கூட்டர்!

தமிழகத்தில் SIR.. அதிமுக, திமுக உள்பட 12 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு..!

தேர்தலுக்குப் பிறகு பாஜக காணாமல் போய்விடும்.. அமைச்சர் ரகுபதி

ரீல்ஸ் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்.. கடலுக்குள் சென்ற மெர்சிடிஸ் கார்..!

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஏசி மினி பேருந்துகள்: போக்குவரத்து கழகம் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments