Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

vinoth
வியாழன், 5 ஜூன் 2025 (11:39 IST)
18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சின்னசாமி மைதானத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்துக்கு இலவச டிக்கெட் வழங்குவதாக ஏற்பட்ட புரளியே லட்சக்கணக்கானோர் அங்கு கூடுவதற்குக்  காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு முழுப் பொறுப்பையும் ஆர் சி பி அணி நிர்வாகமும், கர்நாடக மாநில அரசும்தான் ஏற்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

இன்னும் ஒரு சாரார் புஷ்பா 2 ரிலீஸின் போது இதே போன்ற உயிர்சேதம் நடந்தபோது அதற்குக் காரணம் நடிகர் அல்லு அர்ஜுன்தான் என்று சொல்லி அவர் கைது செய்யப்பட்டார், அது போல இப்போது இந்த உயிர் சேதங்களுக்குக் காரணம் விராட் கோலிதான் என்று அவரைக் கைது செய்வீர்களா எனக் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments