வட இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் ஏடிஎம்களில் பணப்பற்றாக்குறை இருந்து வருவதால் வங்கியில் உள்ள தங்கள் சொந்த பணத்தை கூட எடுக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் ஏடிஎம்களில் போதுமான பணம் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால் பெரிய அரசியல் கட்சிகள் பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருப்பதாகவும் இதனால்தான் வங்கிகளில் பணவரத்து குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக ஏடிஎம்களில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அகில இந்திய வங்கிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்களில் வைக்கும் தொழில்நுட்பம் இன்னும் முறையாக செலுத்தப்படவில்லை என்றும் புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 மட்டுமே இப்போதைக்க்கு ஏடிஎம்களில் வைக்க முடியும் என்றும் வங்கி சங்கம் தெரிவித்துள்ளது. கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் நிலைமை சீராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.