Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இவரா ? தொடரும் அரசியல் பரபரப்பு

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (16:33 IST)
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜகவிடம் படு்தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாருமே தேர்தலில் கட்சித் தோல்விக்குப் பொறுப்பேற்காத  நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடித்தார். இதற்கு 5 மாநில முதல்வர்கள் நேரில் சென்று ராகுலை சமாதானப்படுத்த முயன்றனர். பலவேறு மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தலைவராக நீடிக்க மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறி ராகுல்காந்தி பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. காங்கிரஸ் காரியக் கமிட்டி குழு உடனே கூட்டப்பட்டு புதிய தலைவரை தேர்வு குழு உடனே கூட்டப்பட்டு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார்.
 
மேலும் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராகத் தொடர முடியாது அதனால் தாமதிக்காமல்   உடனே புதிய தலைவரைத் தேர்ந்தெடுங்கள் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் தனது  ராஜினாமா முடிவு ஏன் என்பது குறித்து ராகுல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
அதில், மக்களவைத் தேர்தலில் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். காங்கிரஸ் கட்சியை சீரமைக்கக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு பலரை பொறுப்பாக்க வேண்டியுள்ளது. கட்சியின் அடுத்த தலைவரை நான் தேர்வு செய்வது சரியாக இருக்காது என்று தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்படலாம் என்றும், அவர் காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக பதவி வகிப்பார் என்றும்   தகவல்கள் வெளியாகின்றன.
 
ராகுல் காந்தி ராஜிமானா முடிவை திரும்பப் பெறாத நிலையில் இடைக்கால தலைவராக வோராவை நியமிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
மோதிலால் வோரா மத்திய பிரதேச மாநில முதல்வராக இருமுறை பதவிவகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments