என் குழந்தையே எங்கே போனாய்? நீ எங்கே இருக்கிறாய்? கதறி அழும் விமான பணிப்பெண்ணின் தாய்

Mahendran
வெள்ளி, 13 ஜூன் 2025 (11:44 IST)
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்ணின் தாய், "என் குழந்தையே நீ எங்கே போனாய்? நீ எங்கே இருக்கிறாய்? நான் உன்னை பார்க்க வேண்டும்," என்று கதறி அழுத வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் ஒரு சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்த 242 பேர்களில் ஒரே ஒருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நிலையில், முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 241 பேர் உயிரிழந்தனர். இதில் ஏழு பேர் குழந்தைகள் என்பதும், இரண்டு பேர் கைக்குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இந்த விமானத்தில் பயணம் செய்த பணிப்பெண் ஒருவரின் புகைப்படத்தை பார்த்து, அவரது தாய், "என் குழந்தையே நீ எங்கே போனாய்? நான் உன்னை பார்க்க விரும்புகிறேன். நீ எங்கே இருக்கிறாய்?" என்று கதறியழும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும், அவரது குடும்பத்தினர் இறந்த பணிப்பெண்ணின் ஆல்பத்தைப் பார்த்து கதறி அழும் இந்த வீடியோ கல்நெஞ்சையும் கரைக்கக் கூடிய அளவுக்கு உள்ளது. "இந்தத் தாயின் வலியை குறைப்பதற்கு எந்த மருந்தும் கிடையாது. இது விதி செய்த சதி. இந்த தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை," என பல கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments