இன்று பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு ராணுவ வீரர்களிடையே உரையாற்றியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரின்போது பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்தை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் மார்த்தட்டி வந்தது. ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதை காட்டும் விதமாக இன்று ஆதம்பூர் விமானப்படை தளம் சென்ற பிரதமர் மோடி, அங்கு ராணுவ வீரர்களிடையே உரையாற்றி உள்ளார்.
அப்போது பேசிய அவர் “பஹல்காமில் தாக்குதல் நடத்தி நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை நீங்கள் பழிவாங்கிவிட்டீர்கள். இந்தியா மீது கண் வைக்கும் பயங்கரவாதிகள் அனைவரும் அழித்தொழிக்கப்படுவார்கள். எதிரிகள் எவ்வளவோ முறை முயற்சித்தாலும் நமது பாதுகாப்பு அரணை அவர்களால் ஒன்று செய்ய முடியவில்லை” என்று பேசியுள்ளார்.
மேலும் “சக்தி வாய்ந்த நமது ஏவுகணைகள் சத்தத்துடன் எதிரி நாட்டு இலக்குகளை அடையும்போது அவர்களுக்கு ஏவுகணைகளின் சத்தம் பாரத் மாதா கீ ஜே என்றுதான் கேட்கும்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K