கடந்த சில நாட்களாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம், அதாவது சனிக்கிழமை, இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டது.
இதனை அடுத்து எந்த பெரிய தாக்குதலும் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பிறகு எல்லை பகுதியில் எந்த வித தாக்குதலும் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறவில்லை என்பதால், இந்திய எல்லை மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் அமைதி திரும்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.