Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷ்யாவிலிருந்து கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்குவது எப்போது? பரபரப்பு தகவல்

Advertiesment
ரஷ்யாவிலிருந்து கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்குவது எப்போது? பரபரப்பு தகவல்
, புதன், 12 ஆகஸ்ட் 2020 (07:39 IST)
உலகமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பில் இருக்கிறது என்பதும் உலகில் இரண்டு கோடி மக்களுக்கும் மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்தியாவிலும் இந்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ்க்கு முடிவு கட்டும் வகையில் தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக நேற்று ரஷ்ய அதிபர் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் தங்களுடைய தடுப்பூசி மக்களிடம் நம்பிக்கை பெற வேண்டும் என்பதற்காக தனது மகளுக்கும் போடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
இந்த நிலையில் ரஷ்யாவிலிருந்து இந்த தடுப்பூசியை வாங்க பல நாடுகள் முன்வந்துள்ளன. இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து தடுப்பூசியை வாங்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு முன்னர் இது ஒரு ஆய்வு செய்ய மத்திய அரசு தேசிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்த நிபுணர் குழுவை இன்று ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் ரஷ்யாவிடமிருந்து தடுப்பூசி வாங்குவது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி இறக்குமதி செய்தால் உடனடியாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளத்தில் அடித்துச் சென்றவரை காப்பாற்றிய 12 வயது சிறுவன் !